தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்வான 403 கிராம பஞ்.தலைவர் துணை தலைவர்களுக்கு பயிற்சி நாளை துவங்கி 2 நாட்கள் நடக்கிறது

தூத்துக்குடி, ஜன.23: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கு நாளை மற்றும் நாளை மறுதினம் பயிற்சியளிக்கப்படுகிறது.

 இதுகுறித்து கலெக்டர் சந்தீப்நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 403 கிராம ஊராட்சிகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் துணைத்தலைவர்களுக்கான அறிமுகப்பயிற்சி தூத்துக்குடி ஹோட்டல் பானுபிருந்தாவன் கிரின் பார்க்கில் நாளை மற்றும் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இப்பயிற்சியினை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைக்கிறார். தூத்துக்குடி, கருங்குளம், திருவைகுண்டம், ஆழ்வார்திருநகரி, திருச்செந்தூர், உடன்குடி, சாத்தான்குளம் மற்றும் கோவில்பட்டி ஆகிய 8 ஊராட்சி ஒன்றியங்களில் 202 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் துணைத்தலைவர்களுக்கான அறிமுகப்பயிற்சி 24ம் தேதியும், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் புதூர் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 201 ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம பஞ்சாயத்து தலைவர்கள் துணைத்தலைவர்களுக்கான அறிமுகப்பயிற்சி 25ம் தேதியும் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இப்பயிற்சி காலை 10 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடத்தப்பட உள்ளது.
Advertising
Advertising

தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சித்தலைவர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் பொருட்டு அரசியலமைப்பு ஆணைகள் அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிர்வாக அதிகாரம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து அறியவும் அதனை நன்கு செயல்படுத்திடும் நோக்கத்துடன் நடைபெறும் இப்பயிற்சியில் அனைத்து கிராம ஊராட்சிகளின் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Related Stories: