முத்தையாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஸ்பிக்நகர், ஜன.23: தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான முத்தையாபுரம் அய்யன்கோயில் தெரு, சுந்தர்நகர், ஜெஎஸ் நகர், அத்திமரப்பட்டி ரோடு பகுதியில் சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்தது. இதற்காக மாநகராட்சி ஊழியர்கள், போலீசார், மின்வாரியத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர்.

மாநகராட்சி ஊழியர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வரும் தகவல் அறிந்து பெரும்பாலான பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகளை சிலர் தாமாகவே முன்வந்து அகற்றினர்.  அகற்றப்படாமல் இருந்த ஆக்கிரமிப்புகளை போலீசார் பாதுகாப்புடன் அதிகாரிகள் ஜேசிபி மூலம் அகற்றினர். இதில் வீடுகள், கடைகள், வீடுகளின் முகப்புகளின் முன்பு ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றப்பட்டன. அகற்றப்பட்ட பொருட்களை மாநகராட்சி ஊழியர்கள் வாகனங்களில் ஏற்றி சென்றனர். இதில் தெற்குமண்டல ஆணையாளர் பொறுப்பு சேகர், கிழக்கு மண்டல ஆணையாளர் பொறுப்பு பிரின்ஸ், செயற்பொறியாளர்கள் ஆறுமுகம், நாகராஜன், சுகாதார அலுவலர் ராஜபாண்டியன் கலந்து கொண்டனர்.

Related Stories:

>