ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது தூத்துக்குடி பொதுக்கூட்டத்தில் கே.பி.முனுசாமி பேச்சு

தூத்துக்குடி,ஜன.23: ஜெயலலிதா விட்டுச்சென்ற பணிகளை அதிமுக அரசு தொடர்ந்து செயல் படுத்துகிறது என தூத்துக்குடியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்ணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

 தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் கட்சியின் நிறுவனத்தலைவர் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 103வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தூத்துக்குடி விவிடி சிக்னல் எம்.ஜிஆர் திடலில் நடந்தது. கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ தலைமை வகித்தார். பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பொன்ராஜ், முருகன், சேவியர், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் மணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் பி.சி.மணி, பகுதி அவைத்தலைவர்கள் சந்தனம், ரத்தினம், அந்தோணி செல்வராஜ், மாவட்ட பிரதிநிதி சாமுவேல், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இலக்கிய அணி செயலாளர் நடராஜன் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தில் அதிமுக துணை ஓருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியதாவது:
Advertising
Advertising

 எம்ஜிஆர் திரைப்படத்தில் நடித்த காலக்கட்டத்தில் மனிதநேயத்தோடு பல பணிகளை செய்தவர். அந்த சமயத்தில் கொட்டும் மழையில் ரிக்ஷா தொழிலாளி நனைந்து சென்றதை பொறுக்க முடியாமல் சென்னையில் உள்ள ரிக்ஷா தொழிலாளர்களுக்கு மழைக்கோட் வழங்கினார். அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் இருந்த காலத்தில் மக்களை சந்திக்காமல் தொடர் வெற்றி மூலம் இறுதி வரை முதலமைச்சராக இருந்து மறைந்தார்.

  எம்.ஜி.ஆர் விட்டுச்சென்ற பணிகளை ஜெ தொடர்ந்து தேர்தலின் மூலம் வெற்றி பெற்று முதலமைச்சராகி மேலும் பல திட்டங்களை செயல்படுத்தினார். ஏழை மாணவர்களின் கல்விக்காக அவர்களுக்கு தேவையான உடை, காலணி, சைக்கிள், மடிக்கணினி, கல்வி உதவித்தொகை என அனைத்தும் வழங்கப்பட்டு இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்தது. ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் இறந்த பின்பு ஏற்பட்ட சில சலசலப்புகளால் இரு அணிகளாக பிரிந்தோம். ஒரு குடும்பம் கட்சியை வசப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக இணைந்தோம். ஜெ விட்டுச்சென்ற அனைத்து பணிகளை அதிமுக அரசு தொடர்ந்து செயல்படுத்துகிறது. எம்.ஜிஆர் மறைந்து 32 வருடங்களாகிறது. இருந்தாலும் இன்று வரை அவருடைய புகழ் நிலைத்து நிற்கிறது. அவர் வழியில் ஆட்சி செய்த ஜெ புகழும் நிலைத்து நிற்பதால் அதிமுக ஆட்சியை மக்கள் மன்றத்திலிருந்து யாருராலும் வீழ்த்த முடியாது. 2021லும் அதிமுக ஆட்சி தொடரும். இவ்வாறு அவர் பேசினார்.

 அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், ‘தமிழகத்தில் அண்ணா முதலமைச்சராக இருந்து முதலமைச்சராகவே மறைந்தார். எம்.ஜிஆர் முதலமைச்சராக இருந்து முதலமைச்சராகவே மறைந்தார். ஜெயலலிதா முதலமைச்சராக இருந்து முதலமைச்சராகவே மறைந்தார். இது போன்ற வரலாறுகள் எல்லோருக்கும் கிடைக்காது. தூத்துக்குடி மாவட்டத்தில் 19 பேரூராட்சி, இரண்டு நகராட்சிகளை கைப்பற்றி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிப்போம்’ என்றார்.

 தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ பேசுகையில்,‘இந்தியாவில் பெரிய கட்சியாக அதிமுக இருந்து வருகிறது. இந்த மாவட்டத்தில் எதிரிகளையும் துரோகிகளையும் மீறி அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது இனி வரும் காலங்களிலும் வெற்றி தொடரும். எம்.ஜி.ஆரின் புகழை வீழ்த்த இனி யாரும் பிறக்க போவதில்லை’ என்றார்.

கூட்டத்தில் விளாத்திகுளம் எம்.எல்.ஏ, சின்னப்பன், அமைப்பு செயலாளர்  செல்லப்பாண்டியன், ஆவின் சேர்மன் சின்னதுரை, மாவட்ட பஞ்., துணைத்தலைவர் செல்வக்குமார், முன்னாள் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார்,

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாவட்ட அறங்காவலகுழு தலைவர் மோகன், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி இணைச்செயலாளர் பெருமாள்சாமி, மாவட்ட அவைத்தலைவர் அமலிராஜன், பொருளாளர் ஜெபமாலை, ஓன்றியச் செயலாளர்கள் ராமசந்திரன், ஆறுமுகநயினார், ராஜ்நாராயணன், சௌந்திரபாண்டி, மகாராஜன், மாவட்ட அணிச்செயலாளர்கள் ராஜா, டார்சன், ராஜசேகர், குருத்தாய், சேகர், பிச்சையா, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் வீரபாகு, துணைச்செயலாளர் ஞான்ராஜ், எம்.ஜிஆர் மன்ற இணைச்செயலாளர்கள் ஜோதிமணி, சத்யாலட்சுமணன், வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் சுகந்தன் ஆதித்தன், துணைச்செயலாளர்கள் கோமதிமணிகண்டன், ரவீந்திரன், கருப்பசாமி, மாவட்ட விவசாய பிரிவு குணசேகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் தனராஜ், முன்னாள் திருச்செந்தூர் தொகுதி செயலாளர் வடமலை பாண்டியன், ஆறுமுகநேரி ராதாகிஷ்ணன், மாவட்ட மகளிரணி செரினா பாக்கியராஜ், அருண்ஜெபக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் பெருநகர செயலாளர் ஏசாதுரை நன்றி கூறினார்.

Related Stories: