கோவில்பட்டியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகம்

கோவில்பட்டி, ஜன.23: கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது.

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு அண்ணா பேருந்து நிலையம் முன்பு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு எஸ்ஐ நாராயணன், விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை வழங்கினார். அதில், மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும். 4 சக்கர வாகன ஓட்டுநர்கள் மற்றும் பயணிப்பவர்கள் கட்டாயம் சீட்பெல்ட் அணிந்து செல்ல வேண்டும். சிக்னலை மதிக்காமல் வாகனங்களை ஓட்டிச்செல்லக்கூடாது. சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லக் கூடாது என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் பால்கண்ணன், கணேசன், காளிராஜ், சேகர், ராஜகுரு, கற்பகம், மெரியன் கலந்து கொண்டனர்.
Advertising
Advertising

Related Stories: