தூத்துக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடி, ஜன.23: தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளிக்கிழமை)நடைபெறுகிறது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநர் (பொறுப்பு) பேச்சியம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (வெள்ளி) காலை 10.30 மணி அளவில் தூத்துக்குடி ஆசிரியர் காலனி 1ம் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடக்கிறது.இந்த முகாமில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதால், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ மற்றும் கணினி பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம். முகாமில் பங்கேற்போர் தங்களது பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் கலந்து கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: