×

வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நாளை, நாளை மறுநாள் நடக்கிறது

நாகர்கோவில், ஜன.23: குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் பயன்பெறும் பயனாளிகள் தங்கள் கால்நடைகளை கொள்முதல் செய்த பிறகு நன்கு பராமரிக்க வேண்டும் என அரசால் வலியுறுத்தப்பட்டுள்ளது. பயனாளிகளை ஊக்கப்படுத்தும் பொருட்டு, கால்நடைகளை சிறப்பாக பராமரித்த பயனாளிகளுக்கு தமிழ் புத்தாண்டு தினத்தில் பரிசுகளும் வழங்கப்பட்டு வருகிறது. விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்கள் மூலம் வழங்கப்பட்ட வெள்ளாடுகளின் எடையினை அதிகரிக்கும் பொருட்டு, குமரி மாவட்டத்தில் 24.01.2020 மற்றும் 25.01.2020 ஆகிய நாட்களில் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க முகாம் நடைபெற உள்ளது.

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டங்களின் மூலம் பயன் பெற்ற பயனாளிகள் மட்டும் அல்லாமல் அனைத்து விவசாயிகளும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கால்நடைகளுக்கான முகாம் ஞாலம், எள்ளுவிளை, தர்மபுரம், கடுக்கரை, பஞ்சலிங்கபுரம், தோவாளை, குலசேகரபுரம், கணியாகுளம், லீபுரம், ஈசாந்திமங்கலம், மகாராஜபுரம், மாதவலாயம், மேலகிருஷ்ணன்புதூர், இறச்சகுளம், காட்டுபுதூர், மேலசங்கரன்குழி, சகாயநகர், நல்லூர், மணக்குடி, கட்டிமாங்கோடு, மத்திக்கோடு, மங்காடு, மஞ்சாலுமூடு, குருந்தன்கோடு, மாங்கோடு, மெதுகும்மல், செறுகோல், நெட்டாங்கோடு, கல்குறிச்சி, மருதூர்குறிச்சி, முத்தலக்குறிச்சி, முஞ்சிறை, மிடாலம், முள்ளங்கினாவிளை, நடைக்காவு, மருதங்கோடு ஆகிய கிராமங்களில் நடைபெற உள்ளது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Goat Breeding Camp ,
× RELATED பெருஞ்சாணியில் 56.6 மி.மீ மழை பதிவு குமரி...