சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

திருச்சி, ஜன. 22: திருச்சியில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் சிறப்பு தபால் தலை கண்காட்சி நடத்தப்பட்டது.திருச்சி மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா நேற்று முன்தினம் தொடங்கியது. வரும் 27ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. 2ம் நாளான நேற்று மத்திய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. திருச்சி போக்குவரத்து துணை ஆணையர் உதயகுமார் வரவேற்றார். பேரணியை அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சாலை விதிகள் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினார். கலெக்டர் சிவராசு, மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளர் ராஜ்மோகன் திட்ட விளக்கவுரையாற்றினார். பேரணி முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.இதேபோல திருச்சி புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் சார்பில் சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு சாலை பாதுகாப்பு விதி குறித்து சிறப்பு தபால் தலை கண்காட்சி கிளை நூலகத்தில் நடைபெற்றது. நூலகர் தேவகி தலைமை வகித்தார். சிறப்பு அஞ்சல் உறை மற்றும் தபால் தலையினை காட்சிப்படுத்தி வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார் பேசினார். விழாவில் சாலை பாதுகாப்பு விதிகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.சிறப்பு தபால்தலை கண்காட்சிகூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடும் சமூக விரோத நபர்களின் நடமாட்டத்தை கண்டறியவும் சிசிடிவி கேமரா அமைப்பது உதவியாக இருக்கும்.

Related Stories: