×

விருதுநகர் மாணவர் ஐஐடி தேர்வில் சாதனை

விருதுநகர், ஜன. 22: விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ரகுநந்தன், ஐஐடி ஜேஇஇ தேர்வில் 99.05 சதவீத மதிப்பெண் எடுத்து சாதனை புரிந்தார்.
விருதுநகர் நோபிள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ரகுநந்தன். இவர், தனது பள்ளியில் மாலை வேளையில் நடக்கும் ஐஐடி ஜேஇஇ பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார். இவர் ஐஐடி தேர்வில் இயற்பியலில் 99.08, வேதியியலில் 96.53, கணிதத்தில் 98.69 என மதிப்பெண் பெற்றார். சாதனை படைத்த ரகுநந்தனை பள்ளி சேர்மன் டாக்டர் ஜெரால்டு ஞானரத்தினம், செயலர் டாக்டர் வெர்ஜின் இனிகோ, ஐஐடி ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு பயிற்சி ஒருங்கிணைப்பாளர் கிஷோர், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

Tags : Virudhunagar ,student ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...