×

கம்பம் பகுதியில் இரண்டாம் போகநெல் சாகுபடி நாற்று நடும் பணிகளில் விவசாயிகள் தீவிரம்

கம்பம், ஜன. 22: கம்பம் பகுதியில் இரண்டாம் போக நெல் சாகுபடி தொடங்கி உள்ளது. விவசாயிகள் வயல்வெளிகளில் நாற்றுநடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். கம்பம் பள்ளத்தாக்கு உத்தமபாளையம் வட்டத்தில் 11 ஆயிரத்து 807 ஏக்கர், போடி வட்டத்தில் 488 ஏக்கர், தேனி வட்டத்தில் 2 ஆயிரத்து 412 ஏக்கர் என தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்தி 707 ஏக்கர் நிலங்களில் இருபோக நெல் சாகுபடி விவசாயம் நடைபெற்று வருகிறது. முல்லை பெரியாற்று நீரை நம்பியிருக்கும் இந்த விளை நிலங்களுக்கு, ஆண்டு தோறும் முதல் போக சாகுபடி நாற்று நடவுக்காக ஜூன் முதல் வாரம் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். முதல்போக பாசனத்திற்காக முல்லைப்பெரியாற்றிலிருந்து கடந்த ஆகஸ்ட் 29ல் அணையின் நீர்மட்டம் 128.10 அடியாக இருந்த நிலையில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் கூடலூர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் பகுதிகளில் நெல் நடவுப்பணி செய்த வயல்களில் நெல்அறுவடை முடிந்தது.இந்நிலையில் கம்பம் பகுதியில், கடந்த மாதம் இரண்டாம் போக நெல் நடவுப்பணிக்காக நாற்றங்காலில் விதைநெல் விதைத்திருந்திருந்தனர். இந்நிலையில், கம்பம், காயமகவுண்டன்பட்டி, சுருளிப்பட்டி பகுதிகளில் இரண்டாம் போகத்துக்கான நடவுப்பணிகள் தொடங்கி உள்ளது. விவசாயிகள் பெண் கூலி ஆட்கள் மூலம் நடவுப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : area ,Kampam ,
× RELATED கம்பம் போலீஸ் நிலையத்தில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்