×

காரைக்குடி கானாடுகாத்தானில் பொங்கல் கலாச்சார போட்டி வெளிநாட்டினர் பங்கேற்பு

காரைக்குடி, ஜன. 22:  காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா, கலாச்சார போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினர் பங்கேற்றனர். தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மாவட்டந்தோறும் பொங்கல் விழா, கலாச்சார போட்டிகளை கொண்டாப்பட்டு வருகிறது. வெளிநாட்டில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தமிழக மக்களின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இதனை நடத்தி வருகிறது. இதன்படி காரைக்குடி அருகே கானாடுகாத்தானில் சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா போட்கள் நடத்தப்பட்டன. மாவட்ட சுற்றுலா அலுவலர் வெங்கடாஜலபதி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

இத்தாலி, பிரான்ஸ், சுவீடன், ஹங்கேரி உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் கலந்து கொண்டனர். சிலம்பாட்டம், பொய்கால் குதிரை, ஒயிலாட்டம், கரகாட்டம், கருப்பணசாமி ஆட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கயிறு இழுத்தல், பானை உடைத்தல், விளக்கேற்றுதல், கோலமிடுதல், பல்லாங்குழி, தாயம், சொட்டாங்கல், பானை உடைத்தல், பம்பரம் சுற்றல், நினைவாற்றல் உள்பட பல்வேறு பாராம்பரிய போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக வெளிநாட்டு பயணிகளுக்கு பூ மாலை அணிவித்து, குங்குமிட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags : Karaikudi Kanadukatan ,
× RELATED உலக புத்தக தின விழா