×

சிங்கம்புணரி அருகே குண்டும் குழியுமான சாலை

சிங்கம்புணரி, ஜன.22:  சிங்கம்புணரி அருகே வேங்கை பட்டியிலிருந்து பிரான்மலை செல்லும் 3 கிலோ மீட்டர் சாலைகுண்டும் குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஒட்டிகள் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சிங்கம்புணரியிலிருந்து வேங்கை பட்டி வழியாக பிரான்மலை செல்லும் சாலையில் வேங்கைப் பட்டியிலிருந்து 3 கிலோ மீட்டர் தூரம் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. காட்டுக்கருப்பன்பட்டி, மதுராபுரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவ,மாணவிகள் பிரான்மலைக்கு படிக்கவும், இதேபோல்ஆரம்ப சுகாதார மையத்திற்கு பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் சிகிச்சைக்காக செல்கின்றனர்.

மேலும் சுற்றுலாதலமாக விளங்கும் பிரான்மலைக்கு பல்வேறு ஊர்களில் இருந்தும் ஏராளமானோர் இச்சாலை வழியாக சென்று வருகின்றனர். சாலை சேதம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாணவ-மாணவிகள் சைக்கிளில் செல்பவர்கள் கீழே விழும் நிலை உள்ளது, எனவே சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pit road ,Singambunari ,
× RELATED வெங்கமேடு பகுதியில் குண்டும் குழியுமான திட்ட சாலையால் கடும் அவதி