பள்ளி மாணவிகளுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஒத்திகை

விழுப்புரம், ஜன. 22: விழுப்புரத்தில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி ஒத்திகை நடந்தது.

விழுப்புரம்  மாவட்ட தீயணைப்புத்துறை பள்ளி மாணவிகளுக்கான தீ தடுப்பு விழிப்புணர்வு  பயிற்சி ஒத்திகை மற்றும் பேரிடர் மீட்பு ஒத்திகை ராமகிருஷ்ணா மிஷன்  பள்ளியில் நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் முகுந்தன் தலைமையில்  தீயணைப்பு வீரர்கள் தீ விபத்து ஏற்படும்போது மாணவிகள் எவ்வாறு  செயல்படவேண்டும் என்று செயல் விளக்கம் மற்றும் ஒத்திகை செய்து காண்பித்தனர். இதில்  வீட்டில் பயன்படுத்தக்கூடிய எரிவாயு சிலிண்டரில் தீ பிடித்தால் எப்படி அதை  அணைக்க வேண்டும் என்று செயல் விளக்கம் அளிக்கப்பட்டு மாணவர் ஒருவரை அழைத்து  தீயை அணைக்க வைத்தனர். அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டால்  எவ்வாறு அருகில் உள்ளவர்களை காப்பாற்ற வேண்டும் என்றும், ஆயில் மற்றும்  பெட்ரோல் நிறுவனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் அந்த இடத்தில் எவ்வாறு நாம்  இருக்க வேண்டும் என்றும், மேலும் உடம்பில் தீ பிடித்தால் உடனே கீழே படுத்து  உருளவேண்டும். மேலும் முதலுதவி அளிப்பது குறித்தும் செயல்முறை விளக்கம்  அளிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஜெயச்சந்திரன், ஜமுனாராணி,  நவீந்திரன், பள்ளி முதல்வர் பாட்ஷா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: