அனுப்பானடி, ஆரப்பாளையத்தில் இன்று 5 மணிநேரம் மின்தடை

மதுரை, ஜன.22: மதுரையில் இன்று சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி, அனுப்பானடி, தெப்பக்குளம், கோவில் மற்றும் ஆரப்பாளையம் ஆகிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே இன்று காலை 9 மணி துவங்கி மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படுகிறது.

* அனுப்பானடி, தெப்பக்குளம் பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்: ராஜீவ் நகர், பகலவன் நகர், தமிழன் தெரு, ஆசிரியர் காலனி, அரவிந்த் மருத்துவமனை, சினிபிரியா தியேட்டர், ஆவின், ஐராவதநல்லூர், பாபுநகர், ராஜாநகர், சுந்தரராஜபுரம், சிந்தாமணி, அய்யனார்புரம், பனையூர், சாமநத்தம், பெரியார் நகர், கண்ணன் காலனி, அழகாபுரி. தெப்பக்குளம் தெற்கு, புது ராமநாதபுரம் ரோடு, தெப்பக்குளம் மேற்கு, பங்கஜம் காலனி, அனுப்பானடி கிழக்கு மேற்கு பகுதிகள், காமராஜர் சாலை, வடிவேல்நகர், மைனர் ஜெயில் பகுதிகள், குருவிக்காரன் சாலை, புது மீனாட்சிநகர், சிஎம்ஆர் ரோடு, சின்னக்கண்மாய், பாலரெங்காபுரம், நவரத்தினபுரம், பழைய குயவர்பாளையம் ரோடு, லெட்சுமிபுரம் 1 முதல் 6 வரை, கான்பாளையம் 1 முதல் 2 வரை, பச்சரிசிகார தோப்பு முழுவதும், மைனா தெப்பம், கிருஷ்ணாபுரம் பகுதி, மேல அனுப்பானடி கிழக்குப்பகுதி, ஏஏ ரோடு, பிபிரோடு, டிடி ரோடு, மீனாட்சி அவென்யூ பகுதிகள்.

* சுப்பிரமணியபுரம், மாகாளிப்பட்டி பகுதிகளில் மின்தடை ஏற்படும் இடங்கள்: தெற்குவெளிவீதி, தெற்கு மாசி வீதி, மேலமாசி வீதி, தெற்கு மாரட் வீதி, காஜிமார் தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், டிபிகே ரோடு, கட்ராபாளையம், மேலவெளிவீதி, நன்மைதருவார் கோயில் தெரு, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, சுப்பிரமணியபுரம், ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்கே புரம், சின்னக்கடைத்தெரு, மஞ்சணக்காரத்தெரு, பெரியார் பஸ்நிலையம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பகுதி, ஆர்எம்எஸ் ரோடு பகுதிகள், கீரைத்துறை, மாகாளிப்பட்டி, செயின்ட்மேரீஸ் பகுதி, தெற்குவெளி வீதி, தெற்குமாரட் வீதி, பந்தடி, மகால் பகுதி, வாழைத்தோப்பு, கீழவௌிவீதி.

* கோயில் மற்றும் ஆரப்பாளையம் பகுதிகளில் மின்தடை இடங்கள்: கீழ ஆவணி மூல வீதி, தளவாய் வீதி, எழுகடல் அக்ரகாரம், தெற்காவணி மூலவீதி, கீழமாசி வீதி, வெங்கலக்கடைத்தெரு, நேதாஜி ரோடு, தெற்கு, கிழக்கு, வடக்கு சித்திரை வீதிகள், சுங்கம் பள்ளிவாசல் தெரு, யானைக்கல் பகுதி, திருமலைராயர் படித்துறை பகுதி, வடக்கு வெளிவீதி தெற்குபகுதி. புட்டுத்தோப்பு ரோடு, சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ஆரப்பாளையம் கிராஸ், ஆரப்பாளையம் பஸ்ஸ்டாண்ட், பொன்னகரம் பகுதி, அழகரடி, ஆறுமுச்சந்தி ஆட்டுமந்தை திடல், சிம்மக்கல், வடக்கு வெளி வீதி, ராஜா மில் ரோடு, ஸ்காட் ரோடு, பாலம் ஸ்டேசன் ரோடு, அகிம்சாபுரம், முத்துராமலிங்கபுரம், இருதயராஜபுரம்.

Related Stories: