×

மாநகராட்சி கமிஷனர் உத்தரவு மக்களின் மனுக்கள் மீது ஒரு வாரத்தில் தீர்வு

மதுரை, ஜன.22: மதுரை மாநகராட்சியில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பெற்ற மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என கமிஷனர் விசாகன் தெரிவித்தார். மதுரை மாநகராட்சி மண்டலம் 3 அலுவலகத்தில் பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டு வரி, சாலை வசதி, தெருவிளக்கு வசதி, சொத்து வரி பெயர் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 31 மனுக்களை கமிஷனர் விசாகன் பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீது ஒரு வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார். கடந்த குறைதீர்க்கும் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேம்படுத்தப்பட்ட அழைப்பு மைய எண் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்படும் புகார்களை உடனுக்குடன் சரி செய்யுமாறு அவர் உத்தரவிட்டார். துணை கமிஷனர் நாகஜோதி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஜோதிசர்மா, உதவி கமிஷனர் விஜயா, செயற்பொறியாளர் (திட்டம், பொ) பழனிச்சாமி, செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி ஆணையாளர் (வருவாய்)ஜெயராம ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags : city commissioner ,
× RELATED சொத்துவரியை உயர்த்தாதது பற்றி...