100 மீ தூரத்தில் உள்ள சாலைக்கு செல்ல 6 கிமீ சுற்றும் கிராமமக்கள்

மதுரை, ஜன.22: மதுரை அருகே வடபழஞ்சி ஊராட்சிக்கு உட்பட்டது அடைக்கம்பட்டி கிராமம். இங்கு சுமார் 500 வீடுகளுக்கு மேல் உள்ளது. 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ளது. இந்த ஊரை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் வினயிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், ‘‘எங்கள் ஊர் அருகே மதுரை-போடி அகல ரயில் பாதை செல்கிறது. பல ஆண்டுகளாக இந்த 100 மீட்டரில் உள்ள ரோட்டுக்கு வர ரயில்வே தடத்தை கடக்க கடவு பாதை-எண்11 பயன்படுத்தி வந்தோம். இந்நிலையில் சமீபத்தில் திடீரென்று ரயில்வே நிர்வாகத்தினர் கடவுபாதையை அடைத்து சுவர் கட்டிவிட்டனர்.

இதனால் நூறு மீட்டரில் உள்ள ரோட்டுக்கு வர சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி வந்து, கடவுபாதை-10 வழியாக செல்ல வேண்டியுள்ளது. இதனால், மாணவ, மாணவிகள், கூலித்தொழிலுக்கு செல்லும் பெண்கள், பொதுமக்கள் மிகவும் சிரமம் ஏற்படுகிறது. நிலத்தில் விளைந்த விவசாய பொருட்களை இந்த பாதை வழியாக எடுத்து செல்ல போதிய வசதி இல்லை. எனவே இதுநாள் வரை நாங்கள் பயன்படுத்தி வந்த கடவுபாதை எண்-11ஐ மீண்டும் திறந்துவிட்டு, பாதை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். என தெரிவித்திருந்தனர். இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் பரிந்துரை செய்தார்.

Related Stories: