×

அரசு ஆண்கள் பள்ளி மைதானம் சீரமைக்கும் பணி துவங்கியது தென்காசி மாவட்டத்தில் முதல் குடியரசு தினவிழா கொண்டாட்டம்

தென்காசி, ஜன.22: தென்காசியில் புதிய மாவட்டம் உருவான பிறகு நடைபெறும் முதல் குடியரசு தினவிழா நிகழ்ச்சிகள் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. இதற்காக மைதானத்தை சீரமைக்கும் பணிகள் துவங்கியது.
குடியரசு தினவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தலைநகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பங்கேற்று தேசிய கொடியேற்றி வைப்பது வழக்கம். தென்காசி தனிமாவட்டம் கடந்த நவம்பர் 22ம்தேதி உருவான நிலையில் நடைபெறும் முதல் குடியரசு தினவிழா வருகிற 26ம்தேதி கொண்டாடப்படுகிறது.  தென்காசியில் மாவட்டத்தில் நடைபெறும் முதலாவது குடியரசு தினவிழா என்பதால் பொதுமக்கள் மத்தியில் அதிகமான ஆர்வம் காணப்படுகிறது.  இதனையடுத்து அதிகளவில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தினவிழாவை நடத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.   இதையடுத்து அரசு அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது. தற்போது பள்ளி மைதானத்தை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது.  இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்தினர் கூறுகையில், காலை 8.05 மணிக்கு மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் தேசிய கொடியேற்றி வைக்கிறார். தொடர்ந்து பயனாளிகளுக்கு ஒவ்வொரு துறை சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்குதல், போலீஸ் அணிவகுப்பு பள்ளி மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெறும்.  தென்காசி மாவட்டத்தில் நடைபெறும் முதலாவது குடியரசு தினவிழாவை சிறப்பாக நடத்துவதற்கான அனைத்து ஆலோசனைகளும் ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மைதானத்தை சீரமைக்கும் பணி நடைபெறுகிறது.  பாதுகாப்பு ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் நிகழ்ச்சியை கண்டு ரசிக்கலாம் என்று தெரிவித்தனர்.

Tags : First Republic Day Celebration ,Tenkasi District ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...