நெல்லையில் துணை முதல்வர் ஓபிஎஸ்க்கு அதிமுகவினர் வரவேற்பு

நெல்லை, ஜன. 22:  நெல்லை வந்த தமிழக துணை முதல்வர்  ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தாழையூத்தில் நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக  செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 சேரன்மகாதேவி அடுத்த கோவிந்தபேரியில் முன்னாள் சபாநாயகர் பிஎச் பாண்டியன் படத்திறப்பு விழாவில் பங்கேற்க நேற்று நெல்லை வந்த அதிமுக ஒருங்கிணைப்பாளரும்,  தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வத்திற்கு  தாழையூத்து 9ம் எண் பஸ்நிறுத்தம் அருகே மத்திய கூட்டுறவு வங்கித் தலைவரும், நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளருமான தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, விஜிலா சத்யானந்த் எம்.பி., மாநில அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், புறநகர் மாவட்டச் செயலாளர் பிரபாகரன், எம்எல்ஏக்கள் இன்பதுரை, செல்வமோகன்தாஸ்பாண்டியன், முருகையா பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, முன்னாள் எம்.பி. சவுந்தரராஜன், நெல்லை டயோசீசன் ‘லே’ செயலாளர் வேதநாயகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா, மானூர் யூனியன் முன்னாள் சேர்மன் கல்லூர்வேலாயுதம், எஸ்கேஎம் சிவக்குமார், வக்கீல்கள் ஜோதிமுருகன், கோதண்டராமன், வெயிலு முத்து, சிறுபான்மை பிரிவு செயலாளர் மகபூப்ஜான், புறநகர் சிறுபான்மை பிரிவு செயலாளர் கேபிரியல் ஜெபராஜன், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெரியபெருமாள், பகுதி செயலாளர்கள் மோகன், ஜெனி, முன்னாள் எம்எல்ஏ தர்மலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் படப்பை சுந்தரம் மற்றும் தமிழ்ச்செல்வி, திருத்து சின்னத்துரை, வை சின்னத்துரை, எம்.சி.ராஜன், விகேபி சங்கர், அசன்ஜாபர்அலி, தங்க பிச்சையா, நத்தம் வெள்ளப்பாண்டியன், வண்ணை கணேசன், மணக்காடு ஜீவக்குமார், தொழிற்சங்க நிர்வாகிகள் வேல்பாண்டியன், பொன்னுசாமி, பகவதிமுருகன், மகளிர் அணி சொர்ணா, சாந்திநகர் முத்துகிருஷ்ணன், தருவை காமராஜ், சிவன் பாண்டியன், மற்றும் சார்பு அணியினர், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்று வரவேற்றனர்.

Related Stories: