வீடு புகுந்து திருட முயன்ற 2பேர் கைது

தூத்துக்குடி, ஜன.22: தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்தவர் விவேக் செல்வம் (30). சாப்ட்வேர் இன்ஜினியர். இவரது வீட்டுக்குள் நேற்று முன்தினம் 2 மர்ம நபர்கள் அத்து மீறி நுழைந்துள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள லேப்டாப்பை திருட முயன்றுள்ளனர்.  இதனை பார்த்த விவேக் செல்வம் மற்றும் அவரது உறவினர்கள், மர்ம நபர்கள் இருவரையும் மடக்கி பிடித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த விஜய் (25), பாத்திமா நகரை சேர்ந்த பெசில் (31) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: