ஆத்தூர் வாலிபர் தண்டனை கைதியாக அறிவிப்பு

ஆறுமுகநேரி,ஜன.22: தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் தலைவன்வடலி நாடார் தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் பாஸ்கர்(30). இவர் மீது ஏற்கனவே ஆத்தூர் காவல் நிலையத்தில் வழக்குகள் உள்ளன. ரவுடி பட்டியலிலும் இவர் பெயர் இருந்தது.     இந்நிலையில் தேர்தல் சமயங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்தும் பொருட்டு 107ன் கீழ் பாஸ்கரிடம் 28.02.2019 அன்று நன்னடத்தை பிணைபத்திரம் எழுதி பெறப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்நிலையில் பிணைபத்திரம் பெறப்பட்டு ஒரு ஆண்டு காலத்திற்குள் பாஸ்கர் மீது ஆத்தூர் காவல் நிலையத்தில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே குற்றவியல் நடைமுறைச்சட்டம் அவர் மீது நடைமுறையில் இருக்கும்போது மீண்டும் வன்முறை செயலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால் திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனப்பிரியா தூத்துக்குடி மாவட்ட பேரூரணி சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருக்கும் பாஸ்கரை தண்டனை கைதியாக அறிவித்து பாதுகாப்பாக வைக்க உத்தரவிட்டுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: