×

மணப்பாட்டில் நிறுத்தப்பட்ட மினி பஸ் மீண்டும் இயக்கம்

உடன்குடிஜன.22: மணப்பாடு சுனாமி காலனிக்கு 10ஆண்டுகளுக்குப் பின் நிறுத்தப்பட்ட மினிபஸ் மீண்டும் இயக்கப்பட்டதையடுத்து பொதுமக்கள் வரவேற்பளித்தனர்.  உடன்குடி அருகே மணப்பாடு மணல் குன்றின் மேல் உள்ள சுனாமி காலனி 300க்கும் மேற்பட்ட மக்கள் இப்பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த 10ஆண்டுகளுக்கு முன் இப்பகுதிக்கு மினிபஸ் போக்குவரத்து வசதி இருந்ததால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள், மீனவர்கள் மிகுந்த பயன் பெற்று வந்தனர். இந்நிலையில் மினிபஸ் திடீரென சுனாமி காலனி பகுதிக்கு செல்வது நிறுத்தப்பட்டது இதனால் அந்தபகுதி மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர். பொதுமக்கள் படும் சிரமம் குறித்து மணப்பாடு ஊராட்சி மன்ற தலைவி கிரேன்சிட்டா வினோவிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து மினிபஸ் பேருந்து நிர்வாகத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் சுனாமிகாலனி வரை சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து சுனாமி காலனி வந்த மினிபஸ் டிரைவர், கண்டக்டருக்கு வரவேற்பு அளித்தனர்.

Tags : Manappa ,
× RELATED ராஜபக்சே அமைச்சரவையில் இருந்து எம்.பி., மனுச நாணயக்கார ராஜினாமா