×

கிறிஸ்தியாநகரம் தூய மாற்கு ஆலய பிரதிஷ்டை விழா

உடன்குடி,ஜன.22:  உடன்குடி கிறிஸ்தியாநகரம் தூயமாற்கு ஆலய 172வது பிரதிஷ்டை விழா கடந்த 17ம் தேதி மாலை 6 மணிக்கு ஜெபப்பவனியுடன் துவங்கி இரவு 7.30மணிக்கு மிஷனெரி பணித்தள காட்சிகள் நடந்தது. 18ம் தேதி காலை 10 மணிக்கு சேகர உபவாசக் கூடுகை, இரவு 7 மணிக்கு கலைநிகழ்ச்சி, 19ம் தேதி காலை 9 மணிக்கு திருவிருந்து ஆராதனை, இரவு 7 மணிக்கு புத்தக வெளியீடு, பல்சுவை கலைநிகழ்ச்சி நடந்தது. நேற்று (21ம் தேதி) இரவு 7 மணிக்கு நற்செய்தி கூட்டம் நடந்தது.  இன்று (22ம் தேதி) நாளை (23ம் தேதி) இரவு 7 மணிக்கு நற்செய்தி கூட்டம்  நடைபெறும் விடுதலைப்பெருவிழாவில் நாலுமாவடி அப்பாத்துரை சிறப்பு செய்தியளிக்கிறார். 24ம் தேதி காலை 7 மணிக்கு திருவிருந்து ஆராதனை, தொடர்ந்து மிஷினெரி பணி விற்பனை விழா, நண்பகல் 12 மணிக்கு ஐக்கிய விருந்து, மாலை 6.30 மணிக்கு ஆயத்த ஆராதனை, இரவு 8.30 மணிக்கு ஆண்கள் ஐக்கிய சங்கத்தினரின் விருந்து நடக்கிறது. 25ம் தேதி  அதிகாலை 3மணிக்கு குருவானவர் சாமுவேல் தாமஸ் சிறப்பு நற்செய்தியளிக்கிறார்.

 காலை 6மணிக்கு அசன பணி துவக்கம், மாலை 5மணிக்கு   அசன உணவு வழங்குதல், இரவு 9மணிக்கு வாணவேடிக்கை நடக்கிறது. 26ம் தேதி காலை 8.30 மணிக்கு குடியரசு தின கொடியேற்று விழா, தொடர்ந்து ஸ்தோத்திர ஆராதனை, திருவிருந்து ஆராதனை, நண்பகல் 12 மணிக்கு வேதபாட தேர்வு, மாலை 3மணிக்கு அசன பொருட்கள் ஏலம், மாலை 4 மணிக்கு ஞானஸ்நான ஆராதனை, இரவு 7 மணிக்கு சிறப்பு பட்டிமன்றம் நடக்கிறது. விழா
ஏற்பாடுகளை குருவானவர்கள்  செல்வன்மகாராஜா, உதவிகுருவானவர் ஆசா தேவதாஸ், பரிபாலனர் ஞானராஜ் கோயில் பிள்ளை, அசன கமிட்டி தலைவர் பால்ராஜ், செயலாளர் பிரின்ஸ், பொருளாளர் ஜெபஸ்டின் ஜோசப் மற்றும் அசன கமிட்டி உறுப்பினர்கள் சபை மக்கள் செய்து வருகின்றனர்.

Tags : Pilgrimage ,City of Christendom ,
× RELATED ராகுல்காந்தி யாத்திரை நிறைவு...