ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட 61 கிராம பஞ்சாயத்து தலைவர்கள் துணைத்தலைவர்கள் கூட்டம்

ஓட்டப்பிடாரம், ஜன.22: ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட 61 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், துணைத்தலைவர்களுக்கான பணிப்பொறுப்பு குறித்த கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய யூனியன் ஆணையாளர் ஹெலன், ‘புதிய தலைவர்கள் மக்களின் தேவைகளை அறிந்து அர்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும்’ என கேட்டுக்கொண்டார். முன்னிலை வகித்த வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) வளர்மதி, ‘புதிதாக பணி ஏற்கும் தலைவர்கள், துணைத்தலைவர்கள், அதிகாரிகளாகிய எங்களுக்கும் பாலமாக இருக்கக்கூடிய பஞ்சாயத்து செயலாளர்களை பாரபட்சமின்றி நடத்திடவும் அரசு கொண்டு வந்துள்ள பணமில்லா பரிவர்த்தனையானது தற்போது மின்னனு பண பரிவர்த்தனையாக மாறியுள்ளதால் பஞ்.தலைவர்கள் வீணாக பயப்பட தேவையில்லை’ என்றார்.   மேலும் பொறுப்புகள் அனைத்தும் ஜன.13ம் தேதி என முன் தேதியிட்டு ஒப்படைக்கப்படுவதால் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் உரிய முறையில் குறைகள் நடக்காதபடி கவனமாக செயல்படுமாறும் மண்டல பஞ்.அலுவலர்கள் கேட்டுகொண்டனர். அதன்படி பஞ்.தலைவர்கள், துணைத்தலைவர்களின் கையொப்பமானது டிஜிட்டல் முறையில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளதாகவும் மின் கட்டணம், குடிநீர் ஆகிய செலவினங்களுக்கு மட்டுமே காசோலைகள் பயன்படுத்த முடியும் எனவும் அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவித்தனர்.  கூட்டத்தில் ஓட்டப்பிடாரம் யூனியனுக்குட்பட்ட பஞ்.தலைவர்கள், துணைத்தலைவர்கள் மற்றும் பஞ்.செயலாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories: