×

பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் விழிப்புணர்வு ஊர்வலம்

திருவண்ணாமலை, ஜன.22: திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடந்த பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்ட விழிப்புணர்வு ஊர்வலத்தை ஆர்டிஓ தேவி தொடங்கி வைத்தார்.பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவண்ணாமலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலவலர் நடராஜன் தலைமை தாங்கினார்.திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்திலிருந்து தொடங்கிய ஊர்வலத்தை ஆர்டிஓ தேவி கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழிப்புணர்வு ஊர்வலம் நகரில் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது.ஊர்வலத்தின்போது, மாணவிகள், பெண்களை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்தும், பெண்களுக்கு கல்வியின் அவசியம் குறித்தும் கோஷங்களை எழுப்பிச்சென்றனர். இதில், மாவட்ட கல்வி அலுவலர் அருட்செல்வம், தாசில்தார் அமுலு, பள்ளி துணை ஆய்வாளர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : School Department ,
× RELATED 2,222 பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க...