×

ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு ஆலன் கேரியர் மாணவர்கள் 3 பேர் 100 சதவீதம் தேர்ச்சி

சென்னை: ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் இயக்குநர் பிரஜேஷ் மகேஸ்வரி கூறியதாவது: ஜே.இ.இ மெயின் தேர்வு-2020 முடிவுகளை என்டிஏ மாநில வாரியாக முதலிடம் மற்றும் 100 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 9 மாணவர்கள் 100 சதவீதத்தை பெற்றுள்ளனர். இவர்களில் ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட்டில் பயின்ற அகில் ஜெயின், பார்த் திவேதி மற்றும் நிஷாந்த் அகர்வால் ஆகிய 3 பேரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இது தவிர, ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் மாணவர்கள் 10 மாநிலங்களில் முதலிடத்தில் உள்ளனர். ராஜஸ்தானை சேர்ந்த அகில் ஜெயின் மற்றும் பார்த் திவேதி, மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆகர்ஷ் ஜெயின், சண்டிகரை சேர்ந்த குன்வர் ப்ரீத் சிங், அசாமை சேர்ந்த இஷான் தத்தா, உத்தரகாண்ட் பகுதியை சேர்ந்த பசார் அகமது, புதுச்சேரியை சேர்ந்த ஹரிஷ் ஆர், மேற்கு வங்கத்தை சேர்ந்த ஸ்ரீமந்தி டேவ், டெல்லியை சேர்ந்த நிஷாந்த் அகர்வால், கேரளாவை சேர்ந்த அத்வைத் தீபக், தாதர்-நகர் ஹவேலியை சேர்ந்த சரத் விஸ்வகர்மா ஆகியோர் மாநில அளவில் முதலிடத்தில் உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Alan Carrier ,
× RELATED ஜேஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியீடு...