×

ஜிவிஜி விசாலாட்சி கல்லூரியில் புத்தக கண்காட்சி

உடுமலை, ஜன.22: உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியில் புத்தக கண்காட்சி நடைபெற்றது. உடுமலை ஜி.வி.ஜி விசாலாட்சி மகளிர் கல்லூரியின் நூலகமும், கோவை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்சும் இணைந்து கடந்த 2ம் தேதி முதல் 4 நாட்கள் புத்தக கண்காட்சியை கல்லூரியில் நடத்தியது. கண்காட்சியை கல்லூரி முதல்வர் கலைச்செல்வி துவக்கி வைத்தார். இதில் இலக்கியம், விவசாயம், பொது அறிவு, வரலாறு, தொழில்நுட்பம், சிறுகதை, அகராதி, கைத்தொழில், இணையம், கணினி, தலைவர்கள் வாழ்க்கை வரலாறு உள்ளிட்ட 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றிருந்தன. இக்கண்காட்சியை கல்லூரி பேராசிரியர்களும், மாணவிகளும் கண்டு பயன் பெற்றனர்.

Tags : Book Fair ,GVG Visualization College ,
× RELATED சென்னையில் தொடங்கிய 47வது புத்தகக் காட்சி நாளையுடன் நிறைவு..!!