×

பராமரிப்பின்றி இயங்கும் கால்நடை வதைக்கூடம்

குன்னூர்,ஜன.22: குன்னூர் நகராட்சிக்கு சொந்தமாக டிடிகே சாலையில் ஆடு, மாடு வதை செய்யும் கூடம் உள்ளது. இந்த கூடம் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக இயங்கி வருகிறது. இங்கிருந்தே குன்னூர் பகுதியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் இறைச்சி விற்பனைக்கு அனுப்படுகிறது. கடந்த 2008ம் ஆண்டு ஆடுகள் வதை செய்ய புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் தற்போது அந்த கட்டிடம் முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. கடும் துர்நாற்றம் வீசுகிறது. பாழடைந்த கட்டிடம் போல் காட்சியளிக்கும் இந்த வதைக்கூடத்தில் இருந்து இறைச்சி விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.

எவ்வித பராமரிப்பு இல்லாததால் இங்கு வதை செய்யப்படும் இறைச்சியினால் நோய் தொற்று ஏற்படும் என்று நகராட்சி அதிகாரிகளுக்கு மக்கள் பல முறை புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் குன்னூர் நகராட்சி அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட உணவு பாதுகாப்பு துறையினர் இந்த பகுதியில் ஆய்வுகள் நடத்த வேண்டும் என குன்னூர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வதை கூடத்தை முறையாக பராமரிக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED குன்னூரில் குதிரை சாகசத்தில் ராணுவ வீரர்கள் அசத்தல்