பாப்பநாயக்கன்புதூர் மடத்தூரில் இடிந்து விழும் நிலையில் அங்கன்வாடி சத்துணவு கூடம்

கோவை, ஜன. 21:  கோவை மருதமலை சாலை அருகே  பாப்பநாயக்கன்புதூரில் உள்ள மடத்தூர் அங்கன்வாடி சத்துணவு கூடத்தை   சீரமைத்து தரக்கோரி மாவட்ட கலெக்டர் ராஜாமணியிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறியிருப்பதாவது: கோவை பாப்பநாயக்கன்புதூரில் உள்ள மடத்தூர் அங்கன்வாடி சத்துணவுக் கூடத்தில்  சுவர்கள் விரிசல் அடைந்துள்ளது. மேலும் மேற்கூரை ஓட்டையாக இருப்பதால் மழைக்காலங்களில் பள்ளிக்குள் மழைநீர் வருகிறது. இதனால் சுவர்களில் விரிசல் உள்ள கட்டிடம் எந்நேரமும் இடிந்து விழும் சூழ்நிலை உள்ளது.

Advertising
Advertising

சுவரின் ஓட்டை வழியாக எலிகள் வருவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு மேற்படி அங்கன்வாடி சத்துணவு கூடத்தை சீரமைத்து ஏழைக் குழந்தைகளின் உயிருக்கும், அவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் உதவிட வேண்டும். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: