×

தாமஸ் கிளப் வளாக பராமரிப்பு குழுவில் ஊரக வளர்ச்சித்துறைக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்

கோவை,ஜன.22: தமிழ்நாடு  ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட மையம்  சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-  அரசு ஊழியர்கள்  பயன்பாட்டிற்காக இருக்கும் தங்கும் விடுதி மற்றும் மனமகிழ் மன்றமான தாமஸ் கிளப்  வளாகம் ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது இதை மேம்படுத்தும் முயற்சிகள் எடுக்கப்படுவதை வரவேற்கிறோம்.

அன்றைய காலகட்டத்தில் வருவாய்த்துறையும்,  வருவாய்த்துறைக்குள் உள்ளடங்கிய துறைகளாக நீதித்துறை, பொதுப்பணித்துறை, ஊரக  வளர்ச்சித்துறை ஆகியவை இருந்தன. அனைத்து துறை பிரிவுகளும் மாவட்ட கலெக்டரின்  நேரடி பார்வையில் இயங்கின. தற்போது மாவட்ட கலெக்டரின் நேரடி  பார்வையில் ஊரக வளர்ச்சித்துறையும், வருவாய்த்துறையும் இயங்கி வருகின்றன. தாமஸ் கிளப் நிர்வாகத்தை மேம்படுத்திட ஏற்படுத்த உருவாக்கும்  குழுவில் ஊரக வளர்ச்சித்துறைக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Thomas Club Campus Maintenance Committee ,
× RELATED ஆர்வமுடன் வாக்களித்த 100 வயது மூதாட்டி