பவானிசாகர் அணை முன்பு புதிய பாலம் கட்டும் பணி துவக்கம்

சத்தியமங்கலம், ஜன.22:  பவானிசாகர் அணை முன்பு பவானி ஆற்றின் குறுக்கே பழமை வாய்ந்த பாலம் உள்ளது. அணை கட்டுமான பணிகள் நடைபெற்றபோது பொருட்கள் கொண்டு செல்வதற்காக இங்கு பொதுப்பணித்துறை சார்பில் கட்டப்பட்டது. அணை கட்டுமான பணி முடிந்தபின் இப்பாலம் வழியாக புஞ்சைபுளியம்பட்டி-பவானிசாகர்- பண்ணாரி சாலையில் இப்பாலம் வழியாக பஸ் மற்றும் சரக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வந்தது. கடந்த 2018 ஏப்ரல் மாதம் பாலத்தில் நடுவே 2 இடங்களில் பெரிய ஓட்டை விழுந்ததால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

இதன்காரணமாக புங்கார், பெரியார் நகர், காராச்சிக்கொரை, புதுபீர்கடவு, பட்டரமங்கலம், சுஜில்குட்டை, நந்திபுரம், கல்லம்பாளையம், அல்லிமாயாறு, தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். அதன்பின், பாலம் நெடுஞ்சாலைத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.8 கோடி செலவில் புதிய பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிலையில், அணையில் தண்ணீர் முழு கொள்ளளவில் இருந்ததால் பாலப்பணிகள் துவங்கப்படவில்லை. நேற்று புதிய பால கட்டுமன பணிகள் துவங்கியது. முன்னதாக, பழைய பாலத்தின் அருகே பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பவானி ஆற்றில் செல்லும் தண்ணீரை ஒரு பகுதிக்கு திருப்பிவிடுவதற்கான பணிகள் நடந்து வருகிறது.

Related Stories: