×

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து அனைத்து கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருப்போரூர், ஜன. 22: குடியுரிமை சட்டத்தை எதிர்த்து, அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தும் குடியுரிமை  சட்டத்தை திரும்பப் பெறக்கோரி எதிர்க்கட்சிகள் சார்பில் கிழக்கு கடற்கரை  சாலையில் உள்ள கோவளத்தில் பிரமாண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. கோவளம் சுன்னத் ஜமாத் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் சிக்கந்தர் தலைமை  தாங்கினார். கோவளம் மதினா இமாம் அபுபக்கர் சித்திக் வரவேற்றார். கோவளம்  மசூதி நிர்வாகிகள் ஷேக்தாவூத் சிராஜ், நவ்ஷாத் ரப்பானி ஆகியோர் முன்னிலை  வகித்தனர்.

கோவளம் பஸ் நிலையம் அருகே நடந்த கண்டன  ஆர்ப்பாட்டத்தில் அடையாறு குராசானி மசூதியின் தலைமை இமாம் சதீதுத்தின்  பாகவி, மதிமுக மாநில துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, விடுதலை  சிறுத்தைகள் கட்சி மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மண்டல  செயலாளர் சூ.க.விடுதலைச் செழியன், மாவட்ட செயலாளர் ராஜ்குமார், திமுக எம்எல்ஏ இதயவர்மன், மதிமுக மாவட்ட செயலாளர்  பார்த்தீபன், ஒன்றிய செயலாளர்கள் லோகு, சுரேஷ், மமக மாநில  துணைப் பொதுச் செயலாளர் யாக்கூப், தமுமுக தலைமை கழகப் பேச்சாளர்  சலீம் கான், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் ஜாகீர் உசேன் உள்பட  ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர். முடிவில் அசேன்பாஷா நன்றி கூறினார்.

Tags : parties ,
× RELATED தேர்தலுக்கு பிறகு பல கட்சிகள் காணாமல்...