×

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

இடைப்பாடி, ஜன.22: இடைப்பாடி, ஏற்காட்டில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தேசிய சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி, இடைப்பாடி காவல் நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், ஹெல்மெட் அணிவதன் அவசியம், செல்போன் பேசி கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர். நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமை வகித்தார். இதேபோல், கொங்கணாபுரம் காவல்நிலையம் சார்பில், நடந்த விழிப்புணர்வு பேரணியில் பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த பேரணிக்கு இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இதில் முதல்வர் வெங்கடேஸ்வரன், சப் இன்ஸ்பெக்டர் வசந்தி, ராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏற்காடு: ஏற்காடு போலீசார் சார்பில், ஹெல்மெட் விழிப்புணர்வு நடந்தது. எஸ்ஐ ரகு தலைமை வகித்தார். இதில், ஏற்காட்டின் பிரதான பகுதிகளான, பஸ் நிலையம், ஒண்டிக்கடை, சேலம் மெயின் ரோடு, பகோடா பாயிண்ட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளிடம் ரோஜா பூக்களை வழங்கி, ஹெல்மெட் அணிந்து வர வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்