சேலம் சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வக்கீல்களுக்கு அழைப்பு

சேலம், ஜன.22: சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற வக்கீல்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது: தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி சேலம்  மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் ஒப்பந்த அடிப்படையில் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகராக பணிபுரிய தகுதிவாய்ந்த வழக்கறிஞர் மற்றும் குழு வழக்கறிஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், விவரங்களுக்கு “www.ecourts. gov.in/tn/salem’’  என்ற வலைதளத்தை பார்த்து அறிந்து கொள்ளவும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 01.02.2020. வரும் 01.02.2020ந்தேதிக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertising
Advertising

Related Stories: