இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

சேலம், ஜன.22: சேலத்தில் பெட்ரோலிய பொருட்களின் பயன்பாடு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. சேலத்தில் நேற்று சாக்சம் -2020 என்ற சைக்கிள் பேரணி, சேலம் ரங்நாதர் அன்கோ மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில், பெட்ரோலியப் பொருட்களின் பயன்பாடு குறைப்பு மற்றும் ஆரோக்கியமான சுற்றுச்சூழல் தொடர்பாக நடத்தியது. சேலம் மாவட்ட அதிகாரி ஏ.ஆர். சிவக்குமார், காவல்துறை ஜோசப் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தனர். இந்த பேரணியில் 457க்கும் மேற்பட்டோரும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இப்பேரணி 5 கி.மீ. தூரம் சென்று ராயல் ஏஜென்சியில் முடிந்தது. விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை பொதுமக்கள் வரவேற்று பாராட்டு தெரிவித்தனர். 

Advertising
Advertising

Related Stories: