சூளகிரியில் 27ம் தேதி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவியேற்பு

சூளகிரி, ஜன.22: சூளகிரி பிடிஓ அலுவலகத்தில் வரும் 27ம் தேதி சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி ஏற்க உள்ளதையடுத்து, முன்னேற்பாடு பணிகளை அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். சூளகிரி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களாக 25 பேர் வெற்றி பெற்றனர். அதில் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு கடந்த 11ம் தேதி நடந்த மறைமுக வாக்குப்பதிவில் போட்டியிட்டு 14 வாக்குகள் பெற்று அதிமுகவைச் சேர்ந்த மேற்கு ஒன்றிய செயலாளர் ஹேமநாத் மனைவி லாவண்யா வெற்றி பெற்றார். இதையடுத்து, ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வரும் 27ம் தேதி பதவியேற்க உள்ளனர். இதற்காக, சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உறுப்பினர்களுக்கான கூட்டரங்கை தயார்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகளை அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் ஹேமநாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமல் ரவிக்குமார், பாலாஜி, ஜேம்ஸ்குமார், வெங்கடேஷ், உமாசங்கர், பொறியாளர்கள் மணிவண்ணன், சுரேஷ், ஜீவமணி ஆகியோர் பார்வையிட்டனர்.

Tags : Union ,committee members ,
× RELATED அரசு பஸ்களை முறையாக பராமரித்து இயக்க...