தேன்கனிக்கோட்டை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு மாதிரி வாக்குப்பதிவு


தேன்கனிக்கோட்டை, ஜன.22:தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் தேர்தல்குழு ஏற்படுத்தி அதன் மூலம் மாணவர்களிடையே தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த சிஇஓ உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தேன்கனிக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. தலைமை ஆசிரியர் அம்பிகா முன்னிலையில் நடைபெற்ற முகாமில் 9ம் வகுப்பு மாணவிகள் 350 பேர் பங்கேற்று மாதிரி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தனர். வாக்குச்சாவடி மையத்தில் மாணவிகளே தேர்தல் அதிகாரிகளாகவும், முகவர்களாகவும் நியமிக்கப்பட்டு வாக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, வாக்குப்பதிவு முடிந்த பெட்டியை சீலிட்டு பத்திரப்படுத்துதல், வாக்கு எண்ணிக்கை செய்து அறிவித்தலை மாணவிகள் செய்து காண்பித்தனர். ஏற்பாடுகளை சமூக அறிவியல் ஆசிரியர்கள் புஷ்பா, தேன்மொழி, சிவக்குமார், சீனிவாசன் அகியோர் செய்திருந்தனர்.

Tags : Thenkanikottai Government School ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு