எல்லை பிரச்னையால் விடுபட்டு போன 500மீ சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

முத்துப்பேட்டை, ஜன.22:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த மேலநம்மங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட கீழநம்மங்குறிச்சி இணைப்பு பாலத்திலிருந்து தஞ்சை மாவட்டம், சிரமேல்குடி வரையிலான சாலையானது சுமார் 4கிலோமீட்டர் தூரம் சாலையாகும், இதில் தஞ்சை மாவட்டம், சிரமேல்குடி திருவாரூர் மாவட்டம் மேலநம்மங்குறிச்சி ஆகிய இணையும் ஒரு பகுதியில் சுமார் 500மீட்டர் இடவெளியில் அந்த இடம் எந்த பகுதி எல்லை? என்ற குழப்பத்தில் இருப்பக்கமும் சாலை பணி ஒப்பந்தம் எடுக்கும் நபர்கள் அங்கு சீரமைப்பு பணியில் ஈடுபடாமல் விட்டுவிடுகின்றனர். இதனால் அந்த 500மீட்டர் சாலை மட்டும் சுமார் 12ஆண்டுக்கு மேலாக பள்ளம், படுங்குழியாக உள்ளது.

இதனால் அப்பகுதியை கடந்து செல்லும் வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.. நடந்து செல்லும் மக்களின் கால்களை பெயர்ந்த ஜல்லிகள் பதம்பார்த்து வருகிறது. முத்துப்பேட்டை மற்றும் அதன் சார்ந்த பகுதியை சேர்ந்த மக்கள் மதுக்கூர் போன்ற பகுதிக்கு செல்ல பட்டுக்கோட்டை மற்றும் மன்னார்குடி வழியாக செல்லும் சுற்றுபதைக்கு செல்லாமல் இந்த சாலையை குறுக்கு வழி சாலையாக சென்று பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மிகவும் இந்த சாலை இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயன்பெறும் சாலையாக உள்ளது. தற்பொழுது இந்த சாலை சேதமாகி உள்ளதால் முத்துப்பேட்டையிலிருந்து சிரமேல்குடி கிராமத்திற்கு சென்று வந்த அந்த ஒரேஒரு மினி பேருந்து வருவது கிடையாது. ஆகவே இப்பகுதி மக்களின் வசதிக்காகவும் வாகனங்கள் தடையின்றி செல்லவும் அதிகாரிகள் தலையிட்டு நேரில் பார்த்து இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,
× RELATED சாலை தடுப்பு கட்டையில் பைக் மோதி இன்ஜினியர் சாவு