×

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு, அனைத்து கட்சி சார்பில் பேரணி, ஆர்ப்பாட்டம்

நீடாமங்கலம்,ஜன.22: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள கொரடாச்சேரி வெட்டாற்று பாலம் அருகில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச்சட்டத்திருத்தத்திற்கு எதிராக ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு மற்றும் அனைத்துக்கட்சி சார்பில் கண்டன பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் ஐக்கிய ஜமாத் கூட்டமைப்புத் தலைவர் அஷ்ரப்அலி தலைமையில் நடந்தது. ஐக்கிய ஜமாத் கூட்டமைப்புச்செயலாளர் சேக்அப்துல்காதர் வரவேற்றார். கொரடாச்சேரி ஒன்றிய திமுக செயலாளர் பாலச்சந்தர்,காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் துரைவேலன்,எஸ்.டி.பி.ஐ மாநில பொறுப்பாளர் சபியுல்லா, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் சுந்தரமூர்த்தி திமுக தலைமைகழகபேச்சாளர் இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் இந்திய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும்,வகையில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியுள்ள மத்திய அரசை கண்டிப்பது.இந்நிய அரசியல் சாசனத்தின் புனிதத்தை குலைக்கும் மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்தும் குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மாநில அரசை கேட்டுக்கொள்வது. உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பேரணி வெண்ணவாசல் வெண்ணாற்றுபாலத்திலிருந்து தொடங்கி கொரடாச்சேரி வெட்டாற்றுபாலம் வரை 21 ஜமாத் கூட்டமைப்பினர்,41கிராம அனைத்துக்கட்சி பிரமுகர்கள்,பல்வேறு இயக்கங்கள்,அமைப்புகள், சமுதாய ஆர்வலர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு முழக்கமிட்டனர். ஐக்கிய ஜமாத் கூட்டமைப்பு பொருளாளர் ரபியுதீன் நன்றி கூறினார்.

Tags : United Jamaat Alliance Against Citizenship Law ,
× RELATED தமிழ்பல்கலை கழகத்தில்...