டிரைவருக்கு வலை 8ம்வகுப்பு தனித்தேர்வர்கள் 27ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்


திருவாரூர், ஜன.22: திருவாரூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத உள்ள தனித் தேர்வர்கள் வரும் 27ம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் ஏப்ரல் 2020 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை எழுத உள்ள தனித்தேர்வர்கள் வரும் 27 ந் தேதி முதல் 31ந் தேதி வரையில் ஆன்லைன் மூலமாக அதற்கான இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். எனவே திருவாரூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுதவுள்ள தேர்வர்கள் இதற்குரிய சேவை மையங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Drivers ,
× RELATED தேவதானப்பட்டியில் உரிமம் இல்லாமல்...