கலெக்டருக்கு நுகர்வோர் மையம் ேகாரிக்கை மாநில அளவிலான வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

திருவாரூர், ஜன.22: திருவாரூரில் மாநில அளவில் நடைபெற்ற வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எம்பி திருச்சி சிவா வழங்கினார். தமிழ்நாடு மாநில வாலிபால் ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியானது திருவாரூரில் மாவட்ட வாலிபால் விளையாட்டு கழகம் சார்பில் கடந்த 17 ம்தேதி துவங்கி நேற்று முன்தினம் வரையில் 4 நாட்கள் நடைபெற்றது. வேலுடையார் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியினை திருச்சி டிஐஜி பாலகிருஷ்ணன், தமிழ்நாடு சிட்கோ தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் மற்றும் வருமான வரித்துறை கமிஷனர் மதிவாணன் மற்றும்  நாராயணி நிதி லிமிடெட் மேலாண்மை இயக்குனர் கார்த்திகேயன் ஆகியோர் துவக்கி வைத்தனர். இதில் திருவாரூர், நாகை, திருச்சி , தஞ்சை ,சேலம் ,சென்னை, திருப்பூர், தென்காசி,செங்கல்பட்டு சிவகங்கை உட்பட மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 60 அணிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் ஆண்கள் பிரிவில் திருவாரூர் அணியும்,பெண்கள் பிரிவில் சென்னை அணியும் முதலிடத்தைப் பிடித்தன வெற்றி பெற்ற அணிகளுக்கு பதக்கம் மற்றும் கோப்பைகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் மாவட்ட வாலிபால் கழக செயலாளர் தியாகபாரி தலைமையில் நடைபெற்றது. இதில் பரிசுகள் மற்றும் கோப்பைகளை திருச்சி சிவா வழங்கினார். விழாவில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சேகர் கலியபெருமாள், ஆரூரான் விளையாட்டு கழக தலைவர் பன்னீர்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Consumer Center for Collector ,winners ,volleyball championship ,
× RELATED முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு சான்று