×

ஊழியர் சங்க நிர்வாகி வலியுறுத்தல் கதிர் அறுவடை இயந்திரத்திற்கு அதிக வாடகை வசூலிக்க கூடாது

திருத்துறைப்பூண்டி,ஜன.22: கதிர் அறுவடை இயந்திரத்திற்கு அரசு நிர்ணயித்த வாடகையை விட அதிகம் வசூல் செய்யக்கூடாது என்று திருவாரூர் கலெக்டருக்கு சமூக ஆர்வலர் பாலம் செந்தில்குமார் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் கடந்த ஆண்டு வீசிய கஜா புயலினால் விவசாயம் பாதிக்கப்பட்டு மகசூல் குறைந்து போனது. இதனால் விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்து கடன் தொகையினை திரும்ப செலுத்தமுடியாமல் உள்ளனர். பயிர் காப்பீட்டு தொகை அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கவில்லை. கிடைத்த தொகையும் போதிய அளவில் இல்லை. இந்தாண்டு மீண்டும் விவசாயிகள் கடன் வாங்கி சாகுபடி செய்துள்ளனர். கதிர் வரும் நேரத்தில் ஆனைக்கொம்பன் தாக்குதலாலும், புகையான், நெற்பழநோய் தாக்குதல்களால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்து வரும் தொகைக்கு கிடைக்குமோ என அச்சத்தில் உள்ளனர். தனியார் அறுவடை இயந்திரங்கள் அதிக வாடகை கேட்பதாலும் குறித்த நேரத்திற்கு அறுவடை செய்யமுடியுமோ என்பது கேள்வி குறியாகியுள்ளது. அரசு வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரங்கள் பயன்படுத்தும்போது கூடுதலான தொகை வசூலிப்பதை வேளாண் பொறியியல் துறை, வேளாண் துறை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Tags : Union Administrator ,
× RELATED ‘ஆபீசுக்கு நேரில் வந்தால் சுடுகாடு...