×

மக்கள் குறைதீர் கூட்டம் 6 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

திருவாரூர், ஜன.22: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நேற்று முன்தினம் கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை வழங்க வேண்டுதல், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், கல்விக் கடன் வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும், முதியோர் ஓய்வு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 190 மனுக்களை கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினரிடம் அந்த மனுக்களை வழங்கி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார். மேலும் மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் 6 பேர்களுக்கு ரூ2 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் திருமண உதவி உதவியினை கலெக்டர் ஆனந்த் வழங்கினார். இதில் கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், டி.ஆர்.ஒ பொன்னம்மாள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் வழங்கினார்.

Tags :
× RELATED ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6...