 தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல் பேராவூரணி அரசு மருத்துவமனையில் வருகை பதிவேடு, மருந்து இருப்பு ஆய்வு

பேராவூரணி, ஜன. 22: பேராவூரணி அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை இணை இயக்குனர் காந்தி ஆய்வு செய்தார்.அப்போது மருத்துவமனை அலுவலகத்தில் வருகை பதிவேடு, போதிய மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதா, பிரசவித்த தாய்மார்கள் எண்ணிக்கை, மகப்பேறு உதவி திட்டம் பயனாளிகளுக்கு முறையாக சென்றடைகிறதா, நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு, கர்ப்பிணிகளை பரிசோதிக்க வழங்கப்பட்டுள்ள நவீன ஸ்கேன் இயந்திரம், சித்த மருத்துவ பிரிவு, ஆய்வகம் முறையாக செயல்படுகிறதா என ஆய்வு செய்தார்.

இதைதொடர்ந்து சிகிச்சை பெற வந்திருந்த நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை குறித்து கேட்டறிந்த இணை இயக்குநர், நோயாளிகளை காத்திருக்க வைக்காமல் உடனடியாக தகுந்த சிகிச்சை வழங்குமாறு அறிவுறுத்தினார். மேலும் கர்ப்பிணிகளுக்கு தாமதமின்றி மகப்பேறு உதவி திட்டம் கிடைப்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது நிர்வாக அலுவலர் செல்வகணபதி, தலைமை மருத்துவ அலுவலர் பாஸ்கர், டாக்டர் காமேஸ்வரி, அலுவலக கண்காணிப்பாளர் செந்தில்குமார், உதவியாளர் பிரகாஷ், சுபிக் ஷா மற்றும் மருத்துவர்கள், அலுவலக பணியாளர்கள் உடனிருந்தனர்.

Related Stories: