திருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 22: திருக்காட்டுப்பள்ளி அருகே சொத்து கேட்டு மனைவி தொந்தரவு செய்ததால் மனமுடைந்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருக்காட்டுப்பள்ளி அருகே முல்லைக்குடி வடக்கு நத்தம் தெரு சைவராஜ் மகன் மோகன்ராஜ் (32). இவரது மனைவி, மாமனார் சைவராஜிடம் சொத்தை பிரித்து தன் பெயரில் எழுதித்தர கேட்குமாறு அடிக்கடி கணவரை வற்புறுத்தி வந்தார். இதில் உடன்பாடு இல்லாத மோகன்ராஜ் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில் மனமுடைந்த மோகன்ராஜ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த பூச்சி கொல்லி மருந்தை குடித்தார். இதையடுத்து ஆபத்தான நிலையில் திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மோகன்ராஜ் இறந்தார். இதுகுறித்து மோகன்ராஜின் தந்தை சைவராஜ் (67) நேற்று திருக்காட்டுப்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டார்.

Tags : suicide ,property ,Tirukkattupalli ,
× RELATED தூக்கிட்டு பெண் தற்கொலை