வெண்ணாற்றில் இருந்து லாரியில் மணல் கடத்தியவர் கைது

திருக்காட்டுப்பள்ளி, ஜன. 22: திருக்காட்டுப்பள்ளி அருகே அனுமதியின்றி வெண்ணாற்றில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பியோடியவரை தேடி வருகின்றனர். திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள வெண்ணாற்றில் சிலர் அனுமதியின்றி மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி- பூதலூர் சாலையில் நேற்று (21ம் தேதி) அதிகாலை இன்ஸ்பெக்டர்(பொ) முருகேசன், சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிரில் வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டபோது ஒருவர் தப்பியோடிவிட்டார். பின்னர் போலீசாரை தாக்க வந்த லாரி டிரைவரை பிடித்து விசாரித்ததில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் சாமியார்மடம் சிவராஜன் மகன் அஜித் (எ) எல்வின் (19) என்பதும், தப்பியோடியது திருச்சினம்பூண்டி தியாகராஜன் மகன் கனகராஜ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், லாரியை கைப்பற்றி வழக்குப்பதிந்து டிரைவர் அஜித்(எ) எல்வினை கைது செய்தனர். மேலும் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர்.

Tags :
× RELATED மணல் கடத்துவதாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தவருக்கு வெட்டு