சம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை

பாபநாசம், ஜன. 22: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் சம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா வெளியி–்ட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் சாகுபடி செய்யப் பட்டுள்ள சம்பா, தாளடி நெற்பயிரில் புகையான் தாக்குதல் காணப்படுகிறது. அறுவடை நிலையில் உள்ள வயல்களில் எரிந்ததுபோல் திட்டு திட்டாக காணப்படுவது புகையான் தாக்குதலாகும். இவ்வாறு உள்ள வயல்களில் பட்டம் பிரித்து சூரிய ஒளி படம் செய்ய வேண்டும். தண்ணீரை வடித்து விட வேண்டும்.

பின்னர் பவர் ஸ்பிரேயர் கொண்டு புப்ரோபெசின் பிளஸ் அசிபேட் கலந்து பூச்சி மருந்து கலவையை தூரின் அடிப்பாகம் நன்கு நனையுமாறு தெளிக்க வேண்டும். 5 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். பச்சை மாறாமல் வளர்ச்சி பருவத்தில் உள்ள நெற்பயிரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேம்பு சார்ந்த பூச்சி மருந்து தெளித்து வைக்க வேண்டும். யூரியா உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். சின்ந்தடிக் பைரித்ராய்டு மருந்துகளை தெளிக்க கூடாது. எனவே புகையான் தாக்குதல் காணப்படும் வயல்களுக்கு அருகில் இருக்கும் விவசாயிகள் உடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பூச்சி மருந்துகளை தெளிக்கும் தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்பு முறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

Related Stories: