இரும்பு சங்கிலியால் கட்டி வைத்த ஊழியர்கள் ஒப்பிலியப்பன் கோயிலில் தெப்ப திருவிழா துவக்கம்

கும்பகோணம், ஜன. 22: கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயிலில் தெப்ப திருவிழா நேற்று துவங்கியது. கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரத்தில் தென் திருப்பதி என்று அழைக்கப்படும் ஒப்பிலியப்பன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பூமிதேவி சமேத ஒப்பிலியப்பன் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். இந்த கோயிலில் ஆண்டு தோறும் தை மாதம் ஒப்பிலியப்பன் சமேத பூமி பிராட்டி தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தெப்ப திருவிழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி வருகிற 25ம் தேதி வரை தினமும் மாலை சுவாமி புறப்பாடு நடக்கிறது. 25ம் தேதி இரவு 7 மணிக்கு முக்கிய விழாவான தெப்ப உலா கோவிலில் அமைந்துள்ள பகலிரா பொய்கை தீர்த்தக்குளத்தில் நடக்கிறது.

Related Stories: