×

ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு இந்திய கம்யூனிஸ்டுட் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜன.22: ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய கம்யூனிடு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் தர்மராஜன், ராஜேந்திரன், பொருளாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற அறிவிப்பை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் இளைஞர் பெருமன்றத்தின் மாவட்ட செயலாளர் ராசேந்திரன், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் இந்திராணி உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Indian ,demonstration ,Communist ,
× RELATED முற்றுகை போராட்டம்