×

அன்னவாசல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளை

புதுக்கோட்டை, ஜன.22: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே 100 அடி ஆழ கிணற்றில் விழுந்த ஜல்லிக்கட்டு காளையை தீயணைப்பு துறையினர் போராடி உயிருடன் மீட்டனர். அன்னவாசல் அருகே உள்ள முக்கண்ணாமலைப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கோனார். இவருக்கு புதூர் ஆதம்பட்டி காலனி அருகே வயல் தோட்டம் உள்ளது. அங்கு பசு மாடு, ஜல்லிட்டுகளை, ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை மேய்ச்சலுக்காக ஜல்லிக்கட்டு காளை தோட்டத்தில் அவிழ்த்து விட்டிருந்தார். அப்போது அவரது தோட்டத்தில் இருந்த 100அடி ஆழமுள்ள வயல் கிணற்றுக்குள் எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டுகாளை கால்தவறி விழுந்து விட்டது. கிணற்றுக்குள் அதிக அளவு தண்ணீர் இருந்தது.
காளை விழுந்ததை அறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் சத்தம் கேட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து கிணற்றுக்குள் விழுந்த காளையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் மீட்க முடியவில்லை. உடனே இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கிணற்றுக்குள் இறங்கி கற்றால் கட்டி ஜல்லிக்கட்டு காளையை கட்டி ஒரு மணி நேரம் முயற்சிக்கு பிறகு பத்திரமாக மீட்டனர். தீயணைப்பு துறையினரை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags : Annawasal ,
× RELATED அன்னவாசல், இலுப்பூர், விராலிமலையில்...