×

ஊழியர்கள் பற்றாக்குறை இசேவை மையத்தில் சான்றிதழ் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதி

புதுக்கோட்டை, ஜன.22: புதுக்கோட்டை மாவட்டத்தில் இசேவை மையத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால், சான்றிதழ்கள் பெறமுடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகாக அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையத்தில் வருவாய்த்துறையின் மூலம் சாதி, வருமானம், இருப்பிடம் முதல் பட்டதாரி, விதவை, வாரிசு, பட்டா மாறுதல், கலப்பு திருமணம் சிறு குறு விவசாயிசான்று, சால்வன்சி, அடகு பிடிப்போர் உரிமம், வட்டிக்கடை உரிமம், ஆதார், வாக்காளர் அட்டை, முதல் திருமண சான்றுகள் இன்னும் பல சான்றுகளை இசேவை மையத்தின் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில் புக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகா அலுவலகங்களில் உள்ள இசேவை மையத்தில் ஏற்கனவே பணிபுரிந்த சிலர் தற்போது பணியில் இல்லை.

இதனால் குறிப்பாக இரண்டு பேர் பணியாற்றிய இடத்தில் சூழ்நிலையில் தற்போது ஒருநபர் மட்டுமே பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சர்வர் பிரச்னை மற்றும் ஊழியர்களின் பற்றாக்குறையினால் பொதுமக்கள் அலைந்து அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தாலுகா அலுவலகத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு நபர் மட்டுமே பணிபுரிவதால் பொதுமக்கள் கூட்டம் தாலுகா அலுவலகத்தில் தினமும் அலைமோதுகின்றது. இதனால் பொதுமக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடந்து மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சம்பந்தபட்ட அரசு அதிகாரிகள் போதிய பணியாளர்களை நியமித்து சர்வர் பிரச்னையை போக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூடுதல் பணியாளர்களை நியமித்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த முன்வ ரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : shortage ,EZE Center ,
× RELATED நியாயவிலை கடைகளில் அரிசி தட்டுப்பாடு...