×

பயன்பெற அழைப்பு அரியலூரில் ஊராட்சி தலைவர்களுக்கு இன்று அறிமுக பயிற்சி முகாம்

அரியலூர், ஜன. 22: அரியலூர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு அறிமுக பயிற்சி முகாம் இன்று நடக்கிறது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள 6 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 201 கிராம ஊராட்சிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்களுக்கு ஒரு நாள் அறிமுக பயிற்சி முகாம் அரியலூரில் இன்று காலை 10 மணிக்கு நடக்கிறது. கலெக்டர், ஊராட்சிகளின் ஆய்வாளர் தலைமை வகிக்கின்றனர். மேலும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் சிறப்பாக நடைபெறும் பொருட்டு அரசியலமைப்பு ஆணைகள் அவர்களுக்கான பொறுப்புகள் மற்றும் உள்ளாட்சிகளுக்கான நிர்வாகம், அரசால் செயல்படுத்தப்படும் முதன்மை திட்டங்கள், குடிமை செயல்பாடுகள் குறித்து அறியவும், நன்கு செயல்படுத்தும் நோக்கத்துடன் பயிற்சி வகுப்பு நடக்கிறது. எனவே பயிற்சியில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் துணை தலைவர்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : training camp ,panchayat leaders ,Ariyalur ,
× RELATED மண்டல அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி முகாம்